2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிஹனெளக்வில்லே கட்டடம் தகர்ந்தமை: 18 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2019 ஜூன் 23 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்போடியாவின் கரையோர நகரமான சிஹனெளக்வில்லேயிலுள்ள ஏழு மாடிக் கட்டடமொன்று தகர்ந்ததில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதுடன், ஏனையோரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கையில், மோசமாகக் காயமடைந்த சிலர் உட்பட குறைந்தது 24 பேர் காயமடைந்துள்ள நிலையில் தப்பித்தத்தவர்களை தேடும் பணி தொடருகின்றது.

கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த குறித்த கட்டடமானது சீன நிறுவனமொன்றால் ஆளப்பட்டு வந்துள்ளது. அண்மைய ஆண்டுகளில் குறித்த சிஹனெளக்வில்லேயில் அமைக்கப்பட்ட சீன ஹொட்டல்கள், கசினோக்களால் சிஹனெளக்வில்லே மாற்றமடைந்திருந்தது.

இந்நிலையில், கட்டடத்தின் சீன உரிமையாளர், கட்டுமான நிறுவனத்தின் தலைவர், ஒப்பந்தகாரர் உட்பட நான்கு பேர் கட்டடம் தகர்ந்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைக்காக கம்போடிய நில உரிமையாளர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மீட்புப் பணிகள் தொடருகின்ற நிலையில் காணாமல்போனோரின் எண்ணிக்கைகள் தொடர்பான அறிக்கைகள் வேறுபடுகின்றன.

கொல்லப்பட்டவர்களில், பணியாளர்கள் இருவர், மொழிபெயர்ப்பாளரொருராக மூவர் கம்போடியர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவ இடத்தில் காணப்படும் பெருமெண்ணிக்கையான சிதைவுகளை நகர்த்துவதற்காக உருக்குத் தூண்களை வெட்டுவதற்கு வாள்கள் பயன்படுத்தப்படுகையில் ஏறத்தாழ 1,000 பேர் மீட்பு நடவடிக்கையில் பங்கெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தாம் குறித்த கட்டடத்திலேயே வசித்ததாக கட்டுமானப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .