2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சீனாவில் மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Editorial   / 2020 ஜூலை 07 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது.

நாட்கணக்கான பருவமழையால் சீனாவின் பாரிய பகுதிகளில் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, தேசிய கல்லூரி பரீட்சைகளின் முதலாவது நாளைப் பாதித்த நிலையில், பாடசாலை மாணவர்களைக் காவிச் சென்ற பஸ்ஸொன்று தென்மேற்கு சீனாவிலுள்ள நீர்த்தேக்கமொன்றில் வீழ்ந்துள்ளது.

மத்திய நகரமான வுஹானில் 426 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வ சைனா டெய்லி பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்த நிலையில், வெள்ளமாகவுள்ள வீதிகளிலிருந்து தண்ணீரை அகற்றுவதற்கு பாரிய பம்பிகளைப் பயன்படுத்துகின்றனர்.

கல்லூரி நுழைவுப் பரீட்சைக்காக சென்று கொண்டிருந்த மாணவர்களே தென்மேற்கு குய்ஸூ மாகாணத்தின் அன்ஷுன் நகரத்திலுள்ள நீர்த்தேகத்துக்குள் பாய்ந்த பஸ்ஸுக்குள் இருந்தவர்கள் என அரச ஒளிபரப்பு நிறுவனமான சி.சி.டி.வி தெரிவித்துள்ளது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எவ்வாறெனினும், மழையால் தேசிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழமை வரையில் 119 பேர் இறந்ததாக அல்லது காணாமல்போனதுடன், 5.7 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டதாக அவசரகால அமைச்சு மதிப்பிட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .