2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீனாவுடன் நட்பைப் பிரகடனம் செய்தார் கிம்

Editorial   / 2018 ஜூன் 21 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவுடன் தமது நாடு, மட்டுப்படுத்தப்படாத நட்பு, ஒற்றுமை, ஒத்துழைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என, வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன், சீனாவில் வைத்துப் பிரகடனம் செய்துள்ளார். ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, சிங்கப்பூரில் வைத்து அண்மையில் சந்தித்த பின்னர், சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்வாண்டில் மூன்றாவது முறையாக சீனாவுக்கு விஜயத்தை மேற்கொண்ட கிம், நேற்று முன்தினமும் நேற்றும், சீனாவில் தங்கியிருந்துவிட்டு, வடகொரியாவுக்குத் திரும்பினார்.

ஐ.அமெரிக்காவுடனான நெருக்கத்தை வடகொரியா அதிகரித்துவரும் நிலையில், வடகொரியாவின் முக்கியமான இராஜதந்திர நாடான சீனாவைப் புறக்கணிக்கப் போவதில்லை என்ற உறுதிப்பாட்டை வழங்குவதற்காகவே, சீனாவுக்கான விஜயத்தை, வடகொரியத் தலைவர் மேற்கொண்டார் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இவ்விஜயம் தொடர்பாகச் செய்தி வெளியிட்ட வடகொரிய அரச ஊடகம், ஜனாதிபதி ட்ரம்ப்புடனான சந்திப்பை, வெற்றிகரமான சந்திப்பு என வர்ணித்ததோடு, அதற்கான உண்மையான ஆதரவை, சீனா வழங்கியது எனவும், அதற்கான நன்றியை, கிம் வழங்கினார் எனவும் கூறியது.

அத்தோடு, வடகொரியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை அவர் வெளிப்படுத்தினார் எனவும், அரச ஊடகம் குறிப்பிட்டது.

சீனாவும் வடகொரியாவும், தொடர்ந்தும் நட்புக்குரிய நாடுகளாக இருந்துவந்தாலும், வடகொரியாவால் தொடர்ந்து மேற்காள்ளப்பட்ட அணுவாயுத, ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து, சீனாவின் அதிருப்தியை, வடகொரியா சம்பாதித்திருந்தது. கடந்தாண்டு இறுதிவரை அந்நிலை காணப்பட்டாலும், இப்போது அந்நிலை முன்னேற்றமடைந்துள்ளது எனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X