2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சொந்த இயக்குதளத்தில் சமூக வலைத்தளத்துக்குத் திரும்பவுள்ள ட்ரம்ப்?

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 22 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரண்டு அல்லது மூன்று மாதங்களில், சொந்த இயக்குதளமொன்றை, ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக, அவரது கடந்தாண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கான பேச்சாளர் ஜேஸன் மில்லர், பொக்ஸ் நியூஸுக்கு, நேற்று தெரிவித்துள்ளார்.

முழுமையாக போட்டியை மாற்றக்கூடிய தனது சொந்த இயக்குதளத்துடன் சமூக வலைத்தள இடைவெளிக்கு, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் திரும்புவாரென மில்லர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ. அமெரிக்க காங்கிரஸ் மீதான இவ்வாண்டு ஜனவரி மாதம் ஆறாம் திகதி மீதான தாக்குதலைத் தொடர்ந்து, டுவிட்டர், பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களிலிருந்து, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .