2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘சோடிக்கப்பட்ட’ மோசடிக் குற்றச்சாட்டுகளை சாடும் நெதன்யாகு

Editorial   / 2020 மே 25 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கெதிரான “சோடிக்கப்பட்ட” குற்றச்சாட்டுக்களைச் சாடிய பின்னர் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட அவரது மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் அவர் நேற்றுத் தோன்றியிருந்தார்.

பதவியிலிருக்கும்போது குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் இஸ்ரேலின் முதலாவது பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு, கையூட்டு, மோசடி மற்றும் நம்பிக்கையை மீறிய குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்காக ஜெருசசேலம் மாவட்ட நீதிமன்றத்தில் நுழைய முன்னர் தனது வலதுசாரிக் கொள்கைகளையுடைய லிகுட் கட்சியின் அமைச்சர்கள் புடைசூழ பொதுமக்களுக்கு பேஸ்புக்கில் உரையாற்றியிருந்தார்.

இந்நிலையில், இஸ்ரேலில் நீண்ட காலம் பதவி வகிக்கும் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகுவின் குறித்த வழக்கானது ஆண்டுக் கணக்காக நீடிக்காவிட்டாலும் மாதக்கணக்காக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய அமர்வின்போது தன்னை அடையாளப்படுத்தவும், தான் குற்றச்சாட்டுகளை வாசித்து விளங்கிக் கொண்டதாகவும் உறுதிப்படுத்தவே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கதைத்திருந்தார். ஒரு மணித்தியால அமர்வின்போது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வழக்கறிஞர்கள் வழக்கு விடயங்களை ஆராய மேலதிக நேரத்தைக் கோரியிருந்தனர்.

இந்நிலையில், குறைபாடுகளைக் கொண்ட நடைமுறையென்ற பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் அவிஷை மன்டெல்பில்ட் நிராகரித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X