2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறுவதை தடை செய்ய எதிர்பார்க்கும் மாலைதீவுகள் எதிரணி

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது ஜனாதிபதி தேர்தல் தோல்வியை சவாலுக்குட்படுத்தியுள்ள வழக்கில் தோல்வியைத் தளுவுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், பதவி விலகும் திட்டங்களை மாலைதீவுகளின் ஜனாதிபதி அப்துல்லா யமீன் அறிவித்துள்ளதையடுத்த சில மணித்தியாலங்களில் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடை செய்யுமாறு மாலைதீவுகளின் எதிரணி பொலிஸாரைக் கோரியுள்ளது.

எதிரணி, ஊடகம், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்ததாக அறியப்படும் யமீன் மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதியை எதிர்கொள்ளாமல் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படக்கூடாதென எதிரணியின் வழக்கறிஞர் ஹஸன் லதீவ் நேற்று மாலைநகர் தலைநகர் மாலேயில் வைத்துத் தெரிவித்துள்ளார்.

எந்த நிமிடத்திலும் யமீன் நாட்டை விட்டு வெளியேறலாம் என தாங்கள் நம்பத் தகுந்த அறிக்கைகளைப் பெற்றதாக பொலிஸ் தலைமையகத்துக்கு வெளியே வைத்துத் தெரிவித்துள்ள லத்தீவ், மோசடி தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதால் யமீன் வெளியேறுவதைத் தடுக்குமாறு பொலிஸாரை வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்துக் கேட்பதற்கு பொலிஸாரை உடனடியாக தொடர்பு கொள்ள முடிந்திருக்கவில்லை.

நிலைமை இவ்வாறிருக்க, எதிரணியின் குறித்த கருத்தை நிராகரித்துள்ள யமீனின் பேச்சாளர் இப்ராஹிம் முவாஸ் அலி, யமீன் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேற மாட்டார் எனவும் எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்கத் தயாராக உள்ளார் எனவும் மிஹாரு செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில், 16 சதவீதமான வாக்குகளால் எதிரணி வேட்பாளர் இப்ராஹிம் மொஹமட் சொலிஹிடம் யமீன் தோல்வியடைந்த நிலையில், குறித்த தேர்தல் முடிவானது அந்நாட்டின் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக நோக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .