2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஜனாதிபதித் தேர்தலில் தவறாக வழிநடத்த முயன்ற ரஷ்யா’

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 17 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நட்புறவாளர்கள், அவரது நிர்வாகத்தின் மூலம் கடந்தாண்டு ஐ. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது, அப்போது ஜனாதிபதி வேட்பாளராகவிருந்த ஜோ பைடனுக்கெதிராக, பிரசாரத்தின்போது தவறாக வழிநடத்தும் குற்றச்சாட்டுகளை, ரஷ்ய அரசாங்கம் விதைக்க முயன்றதாக, ஐ. அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய புலனாய்வு பணிப்பாளர் அலுவலகத்தால் நேற்று பிரசுரிக்கப்பட்ட தேர்தல் தலையீடு குறித்த 15 பக்க அறிக்கையிலேயே குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கான ஆதரவைக் குறைக்கும் வகையிலான ஈரானின் பல முனை தாக்கம் செலுத்துதல் மூலம் வாக்காளர்களை மாற வைக்கும் ஏனைய முயற்சிகளையும் புலனாய்வு முகவரகங்கள் கண்டுபிடித்துள்ளன.

இதுதவிர, கியூபா, வெனிசுவேலா, லெபனானிய குழுவான ஹிஸ்புல்லாவும், தேர்தலில் தாக்கம் செலுத்த மேற்கொண்ட முயற்சிகள் குறித்து தான் கண்ணுற்றதாக, ஐ. அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .