2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஜனாதிபதித் தேர்தல் முடிவையடுத்த ஆர்ப்பாட்டங்களில் அறுவர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2019 மே 23 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தோனேஷியாவில் கடந்த மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் அறுவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவின் ஆளுநர் அனீஸ் பஸ்வெடான் தெரிவித்ததையடுத்து, ஜகார்த்தாவை மையப் பகுதியை நேற்று (22) ஆர்ப்பாட்டங்கள் பாதித்துள்ளன.

மத்திய ஜகார்த்தாவில் நேற்றுக் காலையில் சனத்திரள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரவுக்கு முன்னர் மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இணைந்து கொள்வர் என எதிர்பார்ப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கூடியதில் சிலர் பொல்லுகளைக் கொண்டிருந்ததுடன், கண்ணீர்ப் புகை பிரயோகத்திலிருந்து தம்மைப் பாதுகாக்கும் முகமாக தமது கண்களை சுற்றி சிலர் பற்பசையை பிரயோகித்திருந்தனர்.

பெரும்பான்மையான ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜகார்த்தாவுக்கு வெளியேயிருந்து வந்தது போலத் தோன்றுகையில், தாங்கள் தேடுதல் மேற்கொண்ட சிலரில் பணத்தைக் கொண்டிருந்த கடித உறைகளை பொலிஸார் கண்டுபிடித்ததாக, அந்நாட்டின் தேசிய பொலிஸ் பேச்சாளர் முஹமட் இக்பால் செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதஆக அனீஸ் பஸ்வெடான் தெரிவித்துள்ள நிலையில், பாதுகாப்பைப் பேணுவதக்காக 40,000 பொலிஸ், இராணுவத்தினர் கடமையில் இருப்பதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கலகங்களைக் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட குறைந்தது 20 பேரை இந்தோனேஷிய பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டெடி பிரஸெட்யோ கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X