2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜப்பானில் நிலநடுக்கம்: 3 பேர் பலி; 200 பேர் காயம்

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஒசாகாவில் உள்ளூர் இன்று காலை காலை 8 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மூன்று பேர் பலியானதோடு, 200 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுகத்தின் சேத விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில் உயிரிழந்தவர்களில் 9 வயது சிறுமி ஒருத்தியும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.3 ரிக்டர் அளவில் பூமியதிர்வு பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. எனினும் நிலநடுக்கமானது 5.9 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், பின்னர் 6.1 ரிக்டர் அளவில் அது அதிகரித்து காணப்பட்டதாகவும், ஜப்பானிய வானிலை அவதானம் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

தொழிற்சாலைகள் அதிகமாக அமைந்துள்ள பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு,  பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

"இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம், முதலில் மக்களை பாதுகாக்க வேண்டும்" என  அந்நாட்டு பிரதமர் சின்ஷோ அபே  குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலநடுக்கத்தால் யோட்டோ, நாரா, யோகோ, ஷிகா உள்ளிட்ட பல நகரங்களுக்கான மின்விநியோம் தடைப்பட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சம் வீடுகளுக்கான சமையல் எரிவாயு விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் டைம்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .