2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜப்பான் பிரதமருக்கு அதிரடி வெற்றி

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, அந்நாட்டில் நேற்று (22) நடைபெற்ற தேர்தலில், அதிரடியான வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளார். இதன்மூலம், தேசியவாதத்தை முன்னிறுத்தும் தனது பொருளாதாரக் கொள்கைகளை முன்னிறுத்துவதற்கு, அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

465 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கான தேர்தலை, வழக்கத்துக்கு முன்பாகவே நடத்துவதற்கு, பிரதமர் அபே முடிவெடுத்திருந்தார்.

அண்மைக்காலமாக, வடகொரியா தொடர்பான பிரச்சினைகளாலும் நாட்டின் எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்ட பிளவால் ஏற்பட்ட சாதகமான சூழலாலும், இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, அவரது கட்சியின் தலைமையிலான கூட்டணிக்கு, 311 ஆசனங்களை வெற்றிகொள்ளுமென, நேற்றிரவு வெளியான எதிர்வுகூறல்கள் தெரிவித்தன. இதன்மூலம், ஜப்பானின் வரலாற்றில், அதிக காலம் ஆட்சிபுரிந்த தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு, 310 ஆசனங்கள் தேவையென்ற நிலையில், அவர் அநேகமாக வெற்றிகொள்வார் என்றே, பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இல்லாவிடின், ஒரு, சில ஆசனங்களால், அவர் அதை இழக்கக்கூடுமென, சில ஊடகங்கள் தெரிவித்தன.

அவருக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்குமாயின், அந்நாட்டின் அரசமைப்பை மாற்றுவதற்கான வாய்ப்பு, அவருக்கு ஏற்படும். தற்போதைய அரசமைப்பின்படி, போரில் ஈடுபடுவதற்கான உரிமை, ஜப்பானுக்குக் கிடையாது. அதை மாற்ற வேண்டுமென்பது, பிரதமர் அபே, நெடுங்காலமாக முன்வைத்துவந்த வேண்டுகோளாகக் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .