2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜப்பான் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐத் தாண்டியது

Editorial   / 2018 ஜூலை 10 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் மத்திய, மேற்குப் பகுதிகளில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 100ஐத் தாண்டியுள்ளது என, ஜப்பானிய அதிகாரிகள் நேற்று (09) தெரிவித்தனர். அத்தோடு, மண்சரிவில் மீட்புப் பணிகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுவரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.

கடந்த வாரம் முழுவதும் பெய்த மழையைத் தொடர்ந்து, கடும் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. பல நாட்களின் பின்னர் முதன்முதலாக, நேற்றைய தினம், சூரிய வெளிச்சத்தை அப்பகுதிகளில் காண முடிந்தது. இதனால், வெள்ளத்தின் அளவும் குறைவடைய ஆரம்பித்தது.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற மீட்புப் பணியாளர்கள், அப்பணிகளை ஆரம்பித்துள்ளனர். எனவே தான், உயிரிழந்த மேலும் பலரின் சடலங்களும் மீட்கப்படும் என அஞ்சப்படுகிறது.

பொலிஸார், தீயணைப்புப் படையினர், சுயபாதுகாப்புப் படையினர், கரையோரக் காவல்படையினர் என, 73,000 பேர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக, 700 ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

இதேவேளை, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, வெளிநாடொன்றுக்குச் செல்லவிருந்த பிரதமர் ஷின்ஸோ அபே, வெள்ள அழிவைத் தொடர்ந்து, தனது விஜயத்தை இரத்துச் செய்து, நாட்டிலேயே தங்கியிருக்கத் தீர்மானித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X