2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஜம்மு - காஷ்மிரில் ஆளுநர் ஆட்சி

Editorial   / 2018 ஜூன் 21 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் அதிக குழப்பங்களைக் கொண்ட மாநிலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ஜம்மு - காஷ்மிர் மாநிலத்தில், ஆளுநர் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஒப்புதல் வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, நேற்று (20) முதல், ஆளுநர் ஆட்சி அமுலுக்கு வந்தது.

ஆளும் கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளைத் தொடர்ந்து, அக்கூட்டணியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி விலகியது. அதனால், முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக, மெகபூபா முப்தி அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, மாநிலத்தில் புதிய ஆட்சியேற்படும் வாய்ப்பு இல்லாததால், ஆளுநர் ஆட்சியை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவை, ஆளுநர் வோரா வழங்கினார். இதையடுத்தே, ஆளுநர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மிரில் முதலமைச்சராக இருந்த முப்தி மொஹமட் சயீட், 2016ஆம் ஆண்டில் காலமானதைத் தொடர்ந்து, 4 மாதங்களுக்கு, அங்கு ஆளுநர் ஆட்சி காணப்பட்டது.

அதன் பின்னர், மொஹமட் சயீட்டின் மகள் மெஹ்பூபா முப்தி தலைமையில், அரசாங்கம் அமைக்கப்பட்டது. மக்கள் ஜனநாயகக் கட்சி என்ற அவருடைய கட்சிக்கு, பாரதிய ஜனதா கட்சி ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்தே, இவ்வாட்சி ஏற்பட்டது.

எனினும், ஆளுங்கட்சிக்குள் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மிரின் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் புதுடெல்லிக்கு அழைத்த அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவிலேயே, அரசாங்கத்திலிருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டதோடு, ஆட்சியமைக்கும் முயற்சியை பா.ஜ.க மேற்கொள்ளாது என்றும் அறிவிக்கப்பட்டது.

எனவே தான், புதிதாக அரசாங்கமொன்று ஏற்படும் வாய்ப்பு இல்லாத காரணத்தால், ஆளுநர் ஆட்சிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது. அது, தற்போது ஏற்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .