2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

டுபாயிலும் கொரோனா வைரஸ்

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது  நபர் இனங்காணப்பட்டுள்ளார்.

சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் கொரோனா வைரசினால் இதுவரை சீனாவில் 132 பேர் உயிரிழந்துள்ளனர். 

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த கொரோனா வைரஸ் ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, தாய்வான் மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது. 

இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அனைத்து நாடுகளும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை இந்த வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு இராச்சியத்தில்  சீனாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

‘சீனாவின் வுகான் நகரிலிருந்து இங்கு வந்துள்ள குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

அவர்கள் மருத்துவமனையில் தனி சிகிச்சைப் பிரிவில்அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அவர்களது உடல்நிலை நன்றாக உள்ளது’ என அமீரக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .