2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ட்ரம்பை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கிய ஈரான்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 20 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சில தற்போதைய மற்றும் முன்னாள் ஐ. அமெரிக்க அதிகாரிகளை கறுப்புப் பட்டியலில் நேற்று ஈரான் உள்ளடக்கியுள்ளது.

பயங்கராவத, மனித உரிமைகளுக்கெதிரான நடவடிக்கைகளுக்காகவே இவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், குறித்த தனிந்நபர்களின் ஈரானிலுள்ள எந்தவொரு சொத்துக்களையும் கைப்பற்ற முடியும். எவ்வாறெனினும், அவ்வாறான எந்தவொரு சொத்துக்களும் காணப்படுவதாக தகவலில்லை.

ஜனாதிபதி ட்ரம்ப் தவிர, ஐ. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர், பதில் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்தோபர் மில்லர், திறைசேரிச் செயலாளர் ஸ்டீவன் முனுஷின், மத்திய புலனாய்வு முகவரகப் பணிப்பாளர் ஜினா ஹஸ்பெல், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், ஈரானுக்கான ஐ. அமெரிக்க முன்னாள் பிரதிநிதி பிறையன் ஹூக், எலியொட் ஏப்ரஹாம் உள்ளிட்டோரே இவ்வாறு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஈரானின் வெளிநாட்டமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .