2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ட்ரம்ப்பின் தடையை நீக்கிய பைடன்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவுக்குள் பல கிறீன் கார்ட் விண்ணப்பதாரிகள் நுழைவதைத் தடுத்திருந்த, அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தின் கீழான ஆணையொன்றை அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் மீளப் பெற்றுள்ளார்.

கொவிட்-19 பரவலால் ஏற்பட்ட உயர்வான வேலையில்லா வீதங்களுக்கு மத்தியில், ஐ. அமெரிக்க வேலைகளைப் பாதுகாப்பதற்கான தேவையொன்றை மேற்கோள்காட்டியே குறித்த ஆணையை முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் இட்டிருந்தார்.

இந்நிலையில், நிறைவேற்று ஆணையொன்றின் மூலம் குறித்த உத்தரவை ஜனாதிபதி பைடன் இல்லாமற் செய்ததாக அறிக்கையொன்றில் நேற்று அறிவித்துள்ள வெள்ளை மாளிகை, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்பின் தடையானது குடும்பங்களைப் பிரித்ததாகவும், ஐ. அமெரிக்காவின் விருப்பங்களைப் பிரதிபலிக்கவில்லை எனவும் குறிபிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .