2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘டுட்டேர்ட்டேயின் ஆட்சிக் காலத்தில் 20,000 பேர் கொல்லப்பட்டனர்’

Editorial   / 2018 பெப்ரவரி 23 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதாகக் கூறி, 2016ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டேயின் ஆட்சிக் காலத்தில், 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என, எதிர்க்கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் செனட்டில் உரையாற்றிய அந்தோனியூ ட்ரிலானெஸ் என்ற குறித்த செனட்டர், டுட்டேர்ட்டே நிர்வாகத்தின் அறிக்கைகளையே பயன்படுத்தி, தன்னுடைய வாதத்தை முன்வைத்தார்.

2016ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் திகதி முதல் 2017ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதிவரை, போதைப்பொருளோடு சம்பந்தப்பட்ட 3,967 பேர், பொலிஸ் நடவடிக்கைகளின் போது கைதை எதிர்த்தமையின் காரணமாகக் கொல்லப்பட்டனர் என்று, அவ்வறிக்கை கூறுகிறது என அவர் தெரிவித்தார். அதேபோல், 2016ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் திகதி முதல் 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி வரையில் இடம்பெற்ற 16,355 கொலைகள், “விசாரணையின் கீழ்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

குறித்த அறிக்கையின்படி, போதைப்பொருளோடு சம்பந்தப்பட்ட 118,287 பேர் கைதுசெய்யப்பட்டதோடு, மேலும் 1,308,078 பேர், சரணடைந்தனர் என்று கூறப்படுகிறது.

இத்தரவுகளைப் பயன்படுத்தி உரையாற்றிய செனட்டர், இவற்றின் அடிப்படையில், போதைப்பொருளுக்கு எதிரான போர் என்ற பெயரில், ஜனாதிபதி டுட்டேர்ட்டேயால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் “கீழ்த்தரமான நகைச்சுவைகளுக்கு” முழு நாடுமே சிரித்துக் கொண்டிருக்கும் போது, சக நாட்டவர்கள் 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர், இவ்வாறான கொலைகளை, தமது அடைவு என அரசாங்கம் கூறிவருகிறது எனவும் விமர்சித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .