2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

டூமாவுக்குச் சென்று மாதிரிகளைப் பெற்றனர் கண்காணிப்பாளர்கள்

Editorial   / 2018 ஏப்ரல் 23 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரசாயன ஆயுதங்கள் தொடர்பான சர்வதேச கண்காணிப்பு அமைப்பைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள், சிரியாவின் கிழக்கு கூட்டாவிலுள்ள டூமாவுக்குச் சென்று, இரசாயனத் தாக்குதல் இடம்பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் இடத்திலிருந்து மாதிரிகளைப் பெற்றுள்ளனர்.

இரசாயன ஆயுதங்களைத் தடைசெய்வதற்கான அமைப்பின் கண்காணிப்பாளர்கள், டூமாவுக்குச் செல்வதற்காக, கடந்த பல நாட்களாகக் காத்திருந்தாலும், நேற்று முன்தினமே, அவர்களால் அங்கு செல்லக்கூடியதாக அமைந்தது.

இதை உறுதிப்படுத்திய இரசாயன ஆயுதங்களைத் தடைசெய்வதற்கான அமைப்பு, "சேகரிக்கப்பட்ட மாதிரிகள், றிஜ்ஸ்விஜக்கிலுள்ள ஆய்வுகூடத்துக்கு மாற்றப்படும். அங்கிருந்து, இரசாயன ஆயுதங்களைத் தடைசெய்வதற்கான அமைப்பின் தெரிவுசெய்யப்பட்ட ஆய்வுகூடங்களுக்கு, ஆராய்ச்சிக்காக அனுப்பப்படும்" எனத் தெரிவித்தது.

நேற்று முன்தினமே அங்கு முதலில் சென்றிருந்தாலும், மீண்டுமொரு அப்பகுதிக்குச் செல்வதற்காக முயல்வதாக, அவ்வமைப்புத் தெரிவித்தது. ஆனால், எந்தளவுக்குச் சாத்தியமாக அமையும் என்பது, கேள்விக்குரிய ஒன்றாகவே காணப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை மூலம், டூமாவுக்குச் செல்ல முயன்றுகொண்டிருந்த இவ்வமைப்பின் கண்காணிப்பாளர்கள், பல்வேறு காரணங்களால், அங்கு செல்வதற்கான அனுமதி, ரஷ்யாவாலும் சிரியாவாலும் மறுக்கப்பட்டிருந்தது.

இவற்றுக்கு நடுவில், டூமாவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடங்களிலிருந்து, ஆதாரங்களை அழிக்கும் அல்லது மாற்றும் செயற்பாடுகளில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது என, ஐ.அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது. அதை, ரஷ்யா மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .