2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘டொனால்ட் ட்ரம்ப் மீது விசாரணை வேண்டும்’

Editorial   / 2017 டிசெம்பர் 13 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தம்மீது பாலியல் ரீதியான குற்றங்களைப் புரிந்தார் என்று குற்றஞ்சாட்டும் சுமார் 20 பெண்களில் 3 பெண்கள், தமது குற்றச்சாட்டுகளை மீள முன்வைத்துள்ளதோடு, ஜனாதிபதி மீது காங்கிரஸ் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ட்ரம்ப் இருந்த போதே, அவர் மீது இப்பெண்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும் ஐ.அமெரிக்காவில், பாலியல் குற்றங்கள் தொடர்பில் அண்மைக் காலத்தில் மீண்டும் எழுந்துள்ள கலந்துரையாடல்கள் காரணமாக, ஜனாதிபதி ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளும் மீள எழுந்துள்ளன.இந்நிலையில், ஊடகச் சந்திப்பொன்றை நேற்று முன்தினம் நடத்திய சமந்தா ஹோல்வி, றாஷெல் குரூக்ஸ், ஜெஸிக்கா லீட்ஸ் ஆகியோர், தமது குற்றச்சாட்டுகள் தொடர்பில் காங்கிரஸ் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கோரினர்.

கட்சி வேறுபாடுகளை மறந்து, இவ்விடயத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து, விசாரணைகளுக்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என அவர்கள் கோரினர். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ட்ரம்ப் பதவி விலக வேண்டுமென, ஜனநாயகக் கட்சியின் செனட்டரான கேர்ஸ்டன் கில்லிபிரான்ட் கோரினார். ஏற்கெனவே, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மேலுமிரு செனட்டர்கள், இதே கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

மறுபக்கமாக, காங்கிரஸைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் 54 பேர் இணைந்து, விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோரியுள்ளனர். எனினும், பிரதிநிதிகள் சபையிலும் செனட்டிலும், ஜனாதிபதி ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியே பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் நிலையில், விசாரணைக்கான வாய்ப்புகள் குறைவு என்றே கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X