2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ட்ரம்பின் அழைப்பை பதிவு செய்திருந்த முன்னாள் ஆலோசகர்

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடமிருந்தான அலைபேசி அழைப்பொன்றின் பதிவொன்றென தெரிவித்து, கடந்தாண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் ஆலோசகரான ஓமரோசா மனிக்கல்ட் நியூமன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய அமெரிக்க தொலைக்காட்சி அலைவரிசையான என்.பி.சியில் ஒலிபரப்ப்பப்பட்ட குறித்த பதிவில், குறித்த ஒலிப்பதிவு பதிவுசெய்யப்பட்டதற்கு முதல்நாள் ஓமரோசா மனிக்கல் நியூமன் பதவிநீக்கப்பட்டது குறித்து ஜனாதிபதி ட்ரம்புடையதென நம்பப்படும் குரலொன்றில் ஆச்சரியம் வெளியிடப்படுகிறது.

“ஒருவரும் இது பற்றி எனக்கு கூறவில்லை” என ஆண் குரலில் கூறுவது குறித்த ஒலிப்பதிவில் கூறுவது கேட்கக்கூடியதாகவிருந்தது. இந்நிலையில், கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப் தான் பதவிழந்த பின்னரே தன்னை ஓமரோசா தாக்கத் தொடங்கியதாக  கூறியுள்ளார்.

இதேவேளை, கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ட்ரம்பின் வழக்கறிஞர் றூடி ஜூலியானி, வெள்ளை மாளிகையில் தனியார் உரையாடல்களைப் பதிவு செய்து ஓமரோசா விதியை மீறியிலிருக்கலாம் எனக் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .