2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ட்ரம்ப் - கிம் சந்திப்பு: நடக்குமா, நடக்காதா?

Editorial   / 2018 மே 24 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையிலான சந்திப்பு, நடைபெறுமா, நடைபெறாத என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

இருநாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு, அடுத்த மாதம் 12ஆம் திகதி, சிங்கப்பூரில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், முழுமையான அணுவாயுதமழிப்புத் தொடர்பாக, ஐ.அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தால், பேச்சுவார்த்தையிலிருந்து விலக வேண்டியேற்படுமென, வடகொரியா எச்சரித்திருந்தது.

இந்நிலையில், தற்போது கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரியத் தலைவருடனான சந்திப்பு நடக்காமலிருக்கலாம் என்பதற்கான கணிசமான வாய்ப்புகள் காணப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார். “அது நடைபெறாது என்பதற்கான கணிசமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அது பரவாயில்லை” என அவர் குறிப்பிட்டார்.

சந்திப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ, 12ஆம் திகதி இடம்பெறவுள்ள சந்திப்புக்கான ஏற்பாடுகளை, தாம் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். ஆனால், அச்சந்திப்பு இடம்பெறுமா, இடம்பெறாதா என்பதை எதிர்வுகூறுவதற்கு அவர் மறுத்துவிட்டார்.

இவ்விடயங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் சாரா சான்டர்ஸும், சந்திப்புக்குத் தயார்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். “சந்திப்பதற்கு அவர்கள் விரும்பினால், நாங்கள் நிச்சயமாகத் தயாராக இருப்போம்” என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .