2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘ட்ரம்ப்பின் வருகையை எதிர்க்காதீர்’

Editorial   / 2018 ஜனவரி 22 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐக்கிய இராச்சியத்துக்கு வரவேற்கப்பட வேண்டுமென, ஐ.இராச்சிய வெளிநாட்டுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ட்ரம்ப், ஐ.இராச்சியத்துக்கு வரத் தயங்குகின்றமை, ஐ.இராச்சியத்தின் பொருளாதார நலன்களுக்கு எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் செயற்பாடுகளுக்கு, ஐ.இராச்சியத்தில் கடுமையான எதிர்ப்புகள் காணப்படும் நிலையில், அவர் வருவதற்குச் சாதகமான சூழ்நிலை காணப்படவில்லை. இவற்றுக்கு மத்தியில், அவரின் விஜயங்கள் பிற்போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி ட்ரம்ப்பின் வருகையைப் பிற்பொடுவது, ஐ.இராச்சியத்தின் மிகப்பெரிய பொருளாதார உறவுக்கு எதிராகச் செயற்படுவதாகவும் என, ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஐ.இராச்சியத்தின் மிகப்பெரிய தோழமை நாடாக ஐ.அமெரிக்கா காணப்படுகிறது எனவும், ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X