2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘திக்ரேயில் இராணுவ நடவடிக்கை முடிந்தது’

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 29 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திக்ரே பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைகள் முடிந்ததாக நேற்று தெரிவித்துள்ள எதியோப்பியப் பிரதமர் அபி அஹ்மட், பிராந்தியத் தலைநகரான மெகெல்லேயை மத்திய படைகள் கட்டுப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

மூன்று வாரமாக நீடித்த இம்மோதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக நம்பப்படுவதுடன், ஏறத்தாழ 44,000 பேர் சூடானுக்குச் சென்றிருந்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் அபி பதவிக்கு வர முன்னர் மத்திய அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சக்திவாய்ந்த இனக்குழுமமான திக்ரே மக்களின் விடுதலை முன்னணியின் புரட்சியொன்றையே அடக்க பிரதமர் அபியின் அரசாங்கம் முயன்றிருந்தது.

இந்நிலையில், மோதல் தொடரும் என குறித்த முன்னணியின் தலைவர் டெப்ரெட்சியோன் கெபிறீமிஷேல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முன்னணிக் குற்றவாளிகளை மத்திய பொலிஸார் தொடர்ந்தும் தேடுவர், கைது செய்வர் எனவும் அவர்களை நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்துவர் என அறிக்கையொன்றில் பிரதமர் அபி கூறியுள்ளார்.

இந்நிலையில், முன்னணியின் தலைவர்கள் எவராவது சரணடைந்தனரா என்பது தெளிவில்லாமல் உள்ளதுடன், மெகெல்லேயைச் சுற்றி வெளியேறுவதாக டெப்ரெட்சியோன் கூறியுள்ளார்.

இதேவேளை, முன்னணியால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த திக்ரேயைத் தளமாகக் கொண்ட இராணுவத்தின் வட கட்டளையின் ஆயிரக்கணக்கான படைகளை இராணுவம் விடுவித்தாக பிரதமர் அபி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .