2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தடுப்புக்காவலில் நீரவ் மோடி

Editorial   / 2019 மார்ச் 22 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரச வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில், இரண்டு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கடன் மோசடிக்காக, இந்திய அதிகாரிகளால் வேண்டப்படுகின்ற வைர வியாபாரி நீரவ் மோடி, பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் ஆஜரான பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாரிய வங்கி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து நீரவ் மோடியை நாடு கடத்துமாறு கடந்தாண்டு ஓகஸ்டில் பிரித்தானியாவை இந்தியா கோரியிருந்த நிலையில், மத்தியலண்டனின்ஹொல் போர்ன்  பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நீரவ் மோடி கைது செய்யப்பட்டிருந்தார்.

கணக்கொன்றைத் திறப்பதற்காக வங்கியொன்றுக்கு நீரவ் மோடி சென்ற போது, பணியாளர்களிலொருவர் பொலிஸாரைத் தொடர்பு கொண்டமையைத் தொடர்ந்தே நீரவ் மோடி கைது செய்யப்பட்டிருந்தார்.

அந்தவகையில், மோசடியில்ஈடுபடசதித்திட்டம்தீட்டியமை, குற்றவியல் சொத்துக்களை மறைக்க சதித்திட்டம் தீட்டியவை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் இந்தியாவால் நீரவ் மோடிமீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் பிணை வழங்கப்பட்டால் நீதிமன்றத்தில் சரணடையத்தவறுவார் என குறிப்பிடத்தக்களவு நம்பப்படுவதால் பிணை வழங்கப்படவில்லை என நீதிபதி மேரிமல்லோன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,  தனது பெயர், வயது, முகவரியை உறுதிப்படுத்துவதற்காக மட்டும் பேசியிருந்த நீரவ் மோடி, நாடு கடத்துவதற்கு தான் இணங்கவில்லை எனக்கூறியிருந்தார்.

இதேவேளை,  இந்தியாவில் மோசடிக் குற்றச்சாட்டுக்களைஎ திர்நோக்கியுள்ள இன்னொரு இந்திய வர்த்தகரான விஜய்மல்லையா நாடு கடத்தப்படலாம் என கடந்தாண்டு டிசெம்பரில் பிரித்தானிய நீதிமன்றமொன்று இணங்கியிருந்த நிலையில், அவர் அதற்கெதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .