2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தடுப்புமருந்தில்லாமல் கொவிட்-19-ஐ நிறுத்தக்கூடிய மருந்து

Editorial   / 2020 மே 20 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொவிட்-19 பரவலை இடைநிறுத்தக்கூடிய சக்தியைக் கொண்டிருக்கின்றதென தாம் நம்பும் மருந்தொன்றை சீன ஆய்வுகூடமொன்று தயாரிக்கிறது.

சீனாவின் பிரபலமான பெகிங் பல்கலைக்கழகத்தில் சோதனை செய்யப்பட்ட குறித்த மருந்தானது, தொற்றுக்குள்ளானோரின் குணமடையும் காலத்தை குறைத்தது மாத்திரமில்லாமல் கொவிட்-19க்கான குறுங்கால நோயெதிர்ப்பையும் வழங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விலங்கு சோதனைக் கட்டத்தில் குறித்த மருந்தானது வெற்றிகரமாக இருப்பதாக பெகிங் பல்கலைக்கழகத்தின் மரபணுவியலுக்கான பெய்ஜிங் மேம்பட்ட கண்டுபிடிப்பு நிலையத்தின் பணிப்பாளர் சணி ஸி கூறியுள்ளார்.

தொற்றுக்குள்ளான எலிக்கு மருந்தைச் செலுத்திய பின்னர் வைரஸின் தாக்கமானது 2,500 வீதத்தால் குறைவடைந்ததாக சணி ஸி தெரிவித்துள்ளார்.

கொவிட்-19-இலிருந்து குணமடைந்த 60 நோயாளர்களின் இரத்தத்தின் மூலமே குறித்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. செல்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாவதைத் தடுக்க மனித நோயெதிர்ப்பு சக்தியால் பிறப்பிக்கப்பட்ட பதார்த்தத்தை இரத்தங்களிலிருந்து எடுத்தே குறித்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருந்தானது இவ்வாண்டின் பிற்பகுதியில் பாவனைக்குத் தயாராக இருக்கும் எனத் தான் நம்புவதாக சணி ஸி தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .