2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தென் இஸ்ரேலில் வெடித்த சிரிய ஏவுகணை

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 22 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென் இஸ்ரேலில், தரையிலிருந்து வானுக்கு ஏவும் சிரிய ஏவுகணையொன்று இன்று வெடித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இரகசியமான டிமோனா அணு நிலையத்துக்கருகிலுள்ள எச்சரிக்கையொலிகள் எழுப்பப்பட்டிருந்தன.

இந்நிலையில், இஸ்ரேலில் எதுவிதக் காயங்கள் அல்லது சேதமடைந்ததாக உடனடியாக அறிக்கைகள் எதுவுமில்லை.

இதேவேளை, பதிலடியாக குறித்த ஏவுகணையை ஏவிய ஏவுதளம் உள்ளடங்கலாக சிரியாவிலுள்ள சில ஏவுகணைத் தளங்களை தாங்கள் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸின் புறநகர்களிலுள்ள பகுதிகளை இலக்கு வைத்த இஸ்ரேலிய தாக்குதலை சிரிய வான் கட்டமைப்புகள் இடைமறித்ததாக சிரிய அரச செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.

றொக்கெட்டுகளை வான் கட்டமைப்புகள் மறித்ததாகவும், பெரும்பாலனவற்றை வீழ்த்தியதாகவும் ஆனால், நான்கு படைவீரர்கள் தாக்குதலில் காயமடைந்ததாகவும், சில தளபாடச் சேதம் ஏற்பட்டதாக குறித்த முகவரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரானிய ஆதரவு ஆயுதக்குழுக்கள் பிரசன்னமுள்ள டமஸ்கஸ்ஸுக்கு 40 கிலோ மீற்றர் வடகிழக்காகவுள்ள டுமைர் நகருக்கருகிலேயே இஸ்ரேலிய தாக்குதல்கள் இலக்கு வைத்ததாக, சிரிய இராணுவத்திலிருந்த பிரிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய தாக்குதலொன்றின்போது இஸ்ரேலிய விமானத்தை நோக்கியே சிரிய ஏவுகணை ஏவப்பட்டதாகவும், அது இலக்கை கடந்து டிமோனா பகுதியை அடைந்ததாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X