2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தப்புவாரா மேர்க்கெல்?

Editorial   / 2018 ஜனவரி 23 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனின் சான்செலர் அங்கெலா மேர்க்கெலின் பழைமைவாதக் கட்சியுடன், அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பான உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு, சமூக ஜனநாயகக் கட்சியினர் வாக்களித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, தொடர்ந்து 4ஆவது தடவையாகவும் சான்செலராகப் பதவி வகிக்கும் வாய்ப்பு, மேர்க்கெலுக்கு ஏற்படுமென்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

ஆனால், சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள், 362-279 என்ற அடிப்படையிலேயே, பேச்சுவார்த்தைகளுக்கு வாக்களித்தனர். எனவே, பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் போது, அதற்குக் கடுமையான அழுத்தங்கள் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்தாண்டு செப்டெம்பரில் இடம்பெற்ற தேர்தலில், மேர்க்கெலின் கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்தாலும், அறுதிப் பெரும்பான்மை கிட்டவில்லை. எனவே, ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவை அனைத்தும் தோல்வியடைய, மேர்க்கெலுடன் அரசாங்கத்தில் இணையப் போவதில்லை என ஏற்கெனவே அறிவித்திருந்த சமூக ஜனநாயகக் கட்சியுடன், பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதன் விளைவாகவே, இந்த வாக்களிப்பு இடம்பெற்றது.

முன்னைய அரசாங்கத்தில் மேர்க்கெலுடன் இணைந்து காணப்பட்டாலும், அரசாங்கத்தில் அங்கம் வகித்ததால், தமது ஆதரவு பாதிப்படைந்தது எனத் தெரிவித்தே, அரசாங்கத்தில் இணைவதற்கு, சமூக ஜனநாயகக் கட்சி மறுத்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .