2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தமிழ்நாட்டில் சோதனைச்சாவடிகளில் 2ஆவது நாளாக தீவிர கண்காணிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்தைத் தொடர்ந்து சோதனைச்சாவடிகளில் இரண்டாவது நாளாக தீவிர கண்காணிப்பு பணியில் பொலிஸார் நேற்று  ஈடுபட்டனர்.

மேலும் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கோயில்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் வாகன சோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

ஈரோடு வழியாகச் செல்லும் ரயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்குள்ள அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் மேலதிக பொலிஸார் நியமிக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

இதேவேளை, சத்தியமங்கலம் அருகே கர்நாடக மாநிலம் செல்லும் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதேபோல், கொடுமுடி அருகே உள்ள ஈரோடு மாவட்ட எல்லையான நொய்யல் சோதனைச்சாவடி, தமிழ்நாடு- கர்நாடக மாநில எல்லையான பாலாற்றின் அருகே பாலத்தில் பர்கூர் பொலிஸ் நிலையம் முன்பான சோதனைச்சாவடி, செல்லாம்பாளையம் பொலிஸ் சோதனைச் சாவடியிலும் வாகனச் சோதனை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதேவேளை, ஈரோடு மாவட்ட எல்லையான புஞ்சைபுளியம்பட்டி டானா புதூர் பொலிஸ் சோதனைச்சாவடியில் பொலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து கர்நாடகா மாநிலம் செல்லும் வாகனங்கள் மற்றும் ஈரோடு மாவட்டம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் கேரளா செல்லும் பஸ்கள், கார், லொறி உள்ளிட்ட வாகனங்களில் பொலிஸார் சோதனை மேற்கொண்டிருந்தனர்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .