2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

துருக்கி மீது தடைகளை விதித்த ட்ரம்ப் யுத்தநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தார்

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகிழக்கு சிரியாவில் துருக்கியின் இராணுவ நடவடிக்கை தொடர்பாக துருக்கி மீது ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று  தடைகளை விதித்ததுடன், உடனடியான யுத்தநிறுத்தமொன்றுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பிராந்தியத்திலுள்ள ஐக்கிய அமெரிக்கப் படைகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து தனது குடியரசுக் கட்சியினரிடத்திருந்தே நட்புறவுப் படைகளை கைவிட்டதாக பலத்த விமர்சனத்தை எதிர்கொண்டிருந்த நிலையில் குர்திஷ் போராளிகள் மீது எல்லை கடந்த தாக்குதலை துருக்கி ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில், பேரம்பேசல்களை ஆரம்பிப்பதற்கு உப ஜனாதிபதி மைக் பென்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் றொபேர்ட் ஓ’பிரயனை துருக்கிக்கு தான் அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதேவேளை, எல்லை நகரமான கொபனியைத் தாக்க மாட்டோம் என உறுதியளித்த துருக்கி ஜனாதிபதி றிசெப் தயீப் எர்டோவானுடன் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேரடியாகக் கதைத்ததாக மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

துருக்கியுடனான 100 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வர்த்தக ஒப்பந்தமொன்றுக்கான பேரம்பேசல்களை தான் இடைநிறுத்தியுள்ளதாகவும், உலோகத் தீர்வைகளை 50 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தனது அறிவிப்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதேவேளை, சிரேஷ்ட துருக்கி அதிகாரிகள் மூவர் மற்றும் துருக்கியின் பாதுகாப்பு, சக்தி அமைச்சு மீதும் தடைகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .