2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’தேர்தலில் வென்றால் அடுத்த மாதம் பிரெக்சிற்’

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தாம் வென்றால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை (பிரெக்சிற்) அடுத்த மாத முடிவுக்குள் பூர்த்தி செய்வோம் எனவும், வரவு செலவுத் திட்டமொன்றை அடுத்தாண்டு பெப்ரவரி மாதத்தில் சமர்ப்பிப்போன் என பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பழமைவாதக் கட்சி நேற்று  தெரிவித்துள்ளது.

இம்மாதம் 12ஆம் திகதி நடைபெறவுள்ள பிரெக்சிற், பிரித்தானியாவின் நிலையைத் தீர்மானிக்கவுள்ள தேர்தலுக்கு ஒரு வாரமே இருக்கின்ற நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை விட கருத்துக்கணிப்புகளில் பழமைவாதக் கட்சி முன்னிலையில் காணப்படுகிறது.

எனினும், பெரும்பான்மை அரசாங்கமொன்றை அமைக்கக் கூடியளவுக்கு பழமைவாதக் கட்சி முன்னிலையிலுள்ளதா என்பது இன்னும் தெளிவில்லாமலே உள்ளது.

இந்நிலையிலேயே, முதல் 100 நாட்கள் அரசாங்கத்துக்கான தமது திட்டங்களை வெளியிட்டுள்ள பழமைவாதக் கட்சி, பிரெக்சிற்றை நடைமுறைப்படுத்த, சுகாதாரம், நீதி, கல்வியில் புதிய விதியை அறிமுகப்படுத்த, வரவு செலவுத் திட்டத்தில் வரிக் குறைப்பை மேற்கொள்ள உறுதியளித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்சிற் ஒப்பந்தத்தை மீளப் பேரம்பேசவும், ஆறு மாதங்களுக்குள் பிரெக்சிற் பொதுஜன வாக்கெடுப்பை நடத்தவும் தொழிலாளர் கட்சி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X