2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தலாய் லாமாவின் அறிமுகம்

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆன்மிகத்தலைவர் தலாய்லாமா, இந்தியப் பாடசாலைக்கான உலகளாவிய நெறிமுறை பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். 

இந்த அறிமுக விழாவில் பேசிய தலாய் லாமா, 

“இன்றைய பாடசாலைக் குழந்தைகளுக்கு, 3,000 ஆண்டு வரலாற்றுப் பின்னணி உணர்வையும் பாரம்பரிய உணர்வையும் கலந்து வளர்க்க வேண்டும். இதன்மூலம், உணர்வுடன் கூடிய ஆரோக்கியமான மனநிலையை ஏற்படுத்த முடியும். ஏழு பில்லியன் மக்களிடையே, அமைதி எண்ணத்தைப் போதிக்க வேண்டும். மத நம்பிக்கை வைத்தால், உலகளாவிய கல்வியாக மாறாது. இப்போதுள்ள கல்வியில், மத நம்பிக்கையைத் தொலைவில் வைத்துவிட்டு, பொது அனுபவங்களையும், பொது அறிவு மற்றும் அறிவியல் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.  

“தற்போதுள்ள மாணவர்கள், அறிவியலை பயன்படுத்திக்கொள்ள, உள்ளார்ந்த மதிப்பை மேம்படுத்திக்கொள்ளவும் பார்வை விசாலப்படுத்திக்கொள்ளவும் வேண்டும். இதன்மூலம், நல்ல இணைப்பையும் கருணையையும் கொள்ள முடியும் எனபதோடு, எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபடவும் முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.  

“எந்தவொரு மத நம்பிக்கையையும் தொடாமல், மதச்சார்பற்ற நெறிமுறை பாடத்திட்டத்தைத் தயாரித்திருப்பது சிறப்பு” என்று, அவர் மேலும் கூறியிருந்தார். 

உலகளாவிய நெறிமுறை பாடத்தை, வடமாநிலங்களில் உள்ள ஒன்பது பாடசாலைகளில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படவுள்ளது.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .