2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தாக்குதல் ஆயுதங்களை தடைசெய்தது நியூசிலாந்து

Editorial   / 2019 மார்ச் 22 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாக்குதல் றைபிள்கள், அரைத் தன்னியக்க ஆயுதங்களின் விற்றபனையை, உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நியூசிலாந்து தடைசெய்துல்ளதாக, அந்நாட்டின் பிரதமர் ஜசின்டா ஆர்டன் நேற்று (21) தெரிவித்துள்ளார்.

வழிபட்டுக் கொண்டிருந்த 50 பேரை, இரண்டு பள்ளிவாசல்களில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வெள்ளை மேலாதிக்கவாதியொருவர் கொன்ற ஒரு வாரத்துக்குள்ளேயே மேற்குறித்த தடை அமுலுக்கு வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு அரைத்தன்னியக்க ஆயுதமும் நியூசிலாந்தில் தடைசெய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஜசின்டா ஆர்டன், செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்தார்.

இதேவேளை, தாக்குதல் றைபிள்கள், இராணுவப் பாணியிலான அரைத்தன்னியக்க ஆயுதங்கள் தவிர, உயர் கொள்ளளவு கொண்ட மகசீன்கள், சாதாரண றைபிள்களை, மெய்நிகர் அரைத்தன்னியக்க ஆயுதங்களாக மாற்றும் சாதனங்களும் தடைகளுக்குள் உள்ளடங்குவதாக பிரதமர் ஜசின்டா ஆர்டன் மேலும் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் நாடாளுமன்றம் கூடும்போது, குறித்த சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படும் என்றபோதும், இடைக்காலத் தடை காரணமாக புதிய கொள்வனவுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசாங்கத்தின் கோரிக்கமைய தமது ஆயுதங்களை நியூசிலாந்தவர்கள் கையளிக்குகையில், கிறைஸ்ட்சேர்ச்சில் கொல்லப்பட்ட 50 பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்று (21) தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .