2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தாய்லாந்துச் சிறுவர்களின் ’ஆச்சரியமிக்க நொடி’

Editorial   / 2018 ஜூலை 19 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்திலுள்ள குகையொன்றுக்குள், இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிக்கிக்கொண்ட பின்னர், பலத்த போராட்டத்துக்கு மத்தியில் மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் அவர்களின் கால்பந்தாட்டப் பயிற்றுநரும், வைத்தியசாலையிலிருந்து நேற்று (18) விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள், முதன்முறையாக நேற்று ஊடகங்கள் முன்னால் கருத்து வெளியிட்டனர். மேற்படி பன்னிரண்டு சிறுவர்களில், ஒருவரால் மாத்திரமே, ஆங்கில மொழியைச் சரளமாகப் பேச முடிந்துள்ளது.

இந்நிலையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள மேற்படி சிறுவன், குகைக்குள் சிக்குண்டிருந்த தம்மைக் கண்டுபிடித்த அந்த நொடி, மிகவும் ஆச்சரியமிக்கதென்றுக் கூறியுள்ளார்.

குகைக்குள் இருந்த நாட்களில், தங்களுடைய உணவு, வெறும் தண்ணீராக மாத்திரமே காணப்பட்டதென்றும், அந்தக் குகை நீர், சுத்தமாக இருந்ததென்றும் குறிப்பிட்டுள்ளார்.

தான் உள்ளிட்ட, குகையில் சிக்கியிருந்த அனைவரும், உணவைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்றுத் தெரிவித்திருந்த அந்தச் சிறுவன், பசி என்ற விடயத்திலிருந்துத் தாம் விலகியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கும் மேலாக, குகைக்குள் அடைபட்டிருந்த நிலையில், நோய்த் தொற்று ஏற்படக்கூடும் என்ற அபாயத்தில், கடந்த சில நாட்களாக, வைத்தியசாலையிலேயே இவர்கள் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்றைய தினமே, அவர்கள் விடுவிக்கப்படுவரென்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஒரு நாள் முன்னதாகவே, அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்களும் பயிற்றுநரும், இப்போது நலமாகவுள்ள போதிலும், அவர்களுக்கு மன அழுத்தம் வராமல் இருப்பதற்காக, குறிப்பிட்ட காலத்துக்கு, தொடர்ச்சியாக அவர்கள் கண்காணிக்கப்படவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது. (படங்கள், வீடியோ: டெய்லி​மெயில்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X