2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தி.மு.க வேட்பாளர்களில் முன்னாள் அமைச்சர்களின் மகன், மகள்கள் ஆதிக்கம்

Editorial   / 2019 மார்ச் 18 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) வேட்பாளர்களின் பட்டியலை, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

குறித்த பட்டியலில், முன்னர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஏழு பேரும் 13 புதிய முகங்களும் இடம்பெற்றுள்ளனர். இப்புதியமுகங்களில் பலர், தி.மு.கவின் பிரபலமிக்க தலைவர்களின் மகன்களும் மகள்களும் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மெரினாவிலுள்ள தி.மு.கவின் முன்னாள் தலைவரான மு. கருணாநிதியின் நினைவாலயத்துக்கு முன்னாலும் அவரது கோபாலபுர வீட்டிலுள்ள அவரது நினைவுச்சிலைக்கு முன்னாலும் வைத்த பின்னரே வேட்பாளர் பட்டியலை மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். தவிர, தி.மு.கவின் பொதுச்செயலாளர் கே. அன்பழகனுக்கும் குறித்த பட்டியலை மு.க. ஸ்டாலின் காண்பித்திருந்தார்.

பட்டியலில் எதிர்பார்க்கப்பட்டது போலவே, மு. கருணாநிதியின் மகளான கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகின்றார். இதேவேளை, தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ஆற்காடு என். வீரசாமியின் மகன் கலாநிதி வீரசாமி வட சென்னை தொகுதியில் போட்டியிடுகின்றார். இந்நிலையில், தமிழ்நாட்டின் இன்னொரு முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கபாண்டியன், தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகின்றார். இதுதவிர, தி.மு.கவின் பொருளாளர் துரைமுருகனின் மகன் டி.எம். கதிர் ஆனந்த், வேலூர் தொகுதியிலும், தமிழ்நாட்டின் இன்னொரு முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் டி. கெளதம் சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகின்றார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர்களான தயாநிதி மாறன், டி.ஆர் பாலு, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், ஏ. ராஜா ஆகியோர் முறையே மத்திய சென்னை, ஶ்ரீபெரும்புதூர், தஞ்சாவூர், நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X