2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘திட்டமில்லாமல் பிரெக்சிற்றை ஊக்குவித்தோருக்கு நரகத்தில் விசேட இடம்’

Editorial   / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதிய திட்டங்கள் எவையுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவதை (பிரெக்சிற்) ஊக்குவித்த அரசியல்வாதிகளுக்கு, “நரகத்தில் விசேட இடம்” கிடைக்குமென, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்ட் தெரிவித்தார். பிரெக்சிற் தொடர்பாக, ஐ.இராச்சியத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் காணப்படும் முரண்பாட்டை, அவரது கருத்து வெளிப்படுத்தியுள்ளது.

ஊடகவியலாளர்களிடம் நேற்று முன்தினம் (06) கருத்துத் தெரிவித்த அவர், “பிரெக்சிற்றை எவ்வாறு பாதுகாப்பாக மேற்கொள்வது என்பது தொடர்பான அடிப்படையான திட்டம் கூட இல்லாமல், பிரெக்சிற்றை ஊக்குவித்தவர்களுக்கு, நரகத்தில் விசேட இடம் எவ்வாறிருக்குமென நான் சிந்தித்து வந்தேன்” என்று தெரிவித்தார்.

ஐ.இராச்சியப் பிரதமர் தெரேசா மே-ஐ, இலங்கை நேரப்படி நேற்று மாலை சந்திக்கவிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே அவரது கருத்து அமைந்திருந்தது.

அடுத்த மாத இறுதியுடன், பிரெக்சிற் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், அது தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பில், இன்னமும் இணக்கப்பாடு ஏற்படவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஐ.இராச்சியத்துக்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை, ஐ.இராச்சிய நாடாளுமன்றம் ஏற்கெனவே நிராகரித்துள்ளது. இதனால், எதுவித உடன்பாடுகளுமின்றி பிரெக்சிற் நடைமுறைக்கு வரக்கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.

இவற்றுக்கு மத்தியிலேயே, பிரெக்சிற்றை ஊக்குவித்த சில அரசியல்வாதிகள் மீது டஸ்க் வெளிப்படுத்தியுள்ள கருத்து, அடுத்த சில வாரங்கள், மிகவும் கடுமையான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X