2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திரிபோலியிலிருந்து விலகிய கிழக்குப் படைகள்

Editorial   / 2020 ஜூன் 05 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லிபியத் தலைநகர் திரிபோலியின் கட்டுப்பாட்டை தேசிய இணக்க அரசாங்கம் நேற்று  மீளப் பெற்றுள்ளது.

அந்தவகையில், 14 மாதச் சண்டையொன்றின் பின்னர் திரிபோலியிலிருந்து கிழக்குப் படைகளை தேசிய இணக்க அரசாங்கம் வெளியேற்றியுள்ளது.

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட தென் புறநகர் பகுதிகளில் சடலங்கள் இன்னும் தரையில் காணப்படுவதாகவும், கிழக்குப் படைகளால் புதிய ஆயுதங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, திரிபோலியின் அனைத்து புறநகர்களிலிருந்தும் தாங்கள் வெளியேறுவதாக கிழக்குப் படைகளுடனுள்ள இராணுவத் தகவல்மூலமொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திரிபோலி நகர எல்லைக்குள் உள்ள அனைத்தையும் தாம் கொண்டிருப்பதாக தேசிய இணக்க அரசாங்கப் படைகள் தெரிவித்துள்ளன.

தேசிய இணக்க அரசாங்கத்தின் பிரதமர் பயேஸ் அல்-செராஜ்ஜை நேற்று  சந்தித்த பின்னர் தேசிய இணக்க அரசாங்கத்துக்கான ஆதரவை துருக்கி அதிகரிக்கும் என துருக்கி ஜனாதிபதி றிசெப் தயீப் ஏர்டோவான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அண்மைய முன்னேற்றங்களின் காரணமாக லிபிய தேசிய இராணுவத்தின் ஷெல் வளையத்துக்குள் திரிபோலி இல்லை என தேசிய இணக்க அரசாங்கத்தின் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திரிபோலியின் தென்பகுதியை நோக்கி கடந்த வாரம் தேசிய இணக்க அரசாங்கம் முன்னேறுகையில், வீடுகளில் மறைத்து வைக்கப்பட்ட பல கண்ணிகளைத் தமது போராளிகள் எதிர்கொண்டதாக தேசிய இணக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .