2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

துனீஷிய எல்லையிலுள்ள நகரங்களை தேசிய இணக்க அரசாங்கம் கைப்பற்றியது

Editorial   / 2020 மே 20 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துனீஷிய எல்லைக்கருகிலுள்ள இரண்டு நகரங்களை முன்னாள் இராணுவத் தளபதி காலிஃபா ஹஃப்தாரின் படைகளிடமிருந்து மீளக்கைப்பற்றியதாக லிபியாவின் சர்வதேச ரீதியாக அங்கிகரிக்கப்பட்ட தேசிய இணக்க அரசாங்கத்துடன் இணைந்த படைகள் தெரிவித்துள்ளன.

படெர், திஜி நகரங்களுக்குள் தமது படைகள் நுழைந்ததாகவும், அந்நகரங்களின் வாசிகளால் வரவேற்கப்பட்டிருந்ததாக புர்கன் அல்-கடாப் நடவடிக்கையின் ஊடக அலுவலகமானது பேஸ்புக்கில் அறிக்கையொன்றில் நேற்றுத்  தெரிவித்துள்ளது.

காலிஃபா ஹஃப்தாரின் கட்டுப்பாட்டின் கீழ் 2014ஆம் ஆண்டிலிருந்து இருந்த லிபியத் தலைநகர் திரிபோலிக்கு தெற்காகவுள்ள அல்-வதியா வான் தளத்தை நேற்று முன்தினம் தேசிய இணக்க அரசாங்கத்துடன் இணைந்த படைகள் கடந்த திங்கட்கிழமை கைப்பற்றியிருந்தன.

இந்நிலையில், திரிபோலியின் சண்டை இடம்பெறும் சில பகுதிகளிலிருந்து லிபியாவின் கிழக்கைத் தளமாகக் கொண்ட படைகள் வெளியேறியதாக காலிஃபா ஹஃப்தாரின் லிபிய தேசிய இராணுவத்தின் பேச்சாளர் அஹ்மட் அல்-மெஸ்மரி நேற்றுத்  தெரிவித்துளார்.

எவ்வாறெனினும், நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டதொரு மூலோபாயத் தீர்மானமொன்றின் அங்கமாகவே அல்-வதியா வான்தளமானது கைவிடப்பட்டதாகவும், பழைய உபகரணங்களே அங்கு விடப்பட்டதாக அஹ்மட் அல்-மெஸ்மரி கூறியுள்ளார்.

சண்டைக்களங்களில் படைகள் மீள்பரம்பல், மீள் நிலையெடுத்தல்களொன்றை மேற்கொண்டதாகவும் சில நெருக்கடிமிக்க வசிப்பிடப் பகுதிகளிலிருந்து பின்வாங்கியதாக அஹ்மட் அல்-மெஸ்மரி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .