2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘துருக்கியின் நடவடிக்கை குறித்து ஐ.அமெரிக்காவுக்கு தெரியும்’

Editorial   / 2018 ஜனவரி 23 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவிலுள்ள குர்திஷ்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீதான இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க முன்னர், அது தொடர்பாக, துருக்கியால் ஐக்கிய அமெரிக்காவுக்கு அறிவிக்கப்பட்டது என, ஐ.அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

சிரியாவிலுள்ள குர்திஷ்கள், ஐ.அமெரிக்காவின் ஆதரவு பெற்ற குழுவாக இருப்பதன் காரணமாக, குர்திஷ்கள் மீதான நடவடிக்கை, நேட்டோ அங்கத்துவ நாடுகளான ஐ.அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையில், இடைவெளியை அதிகரித்துள்ளது. ஆனால், தாக்குதலை நடத்த முன்னரே, ஐ.அமெரிக்காவுக்கு அறிவிக்கும் முடிவை துருக்கி எடுத்தமை, இந்த உறவு பிளவடைவதை, துருக்கி விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது.

தாக்குதலுக்கு முன்னரே, அது தொடர்பான அறிவிப்பைத் துருக்கி வழங்கியது என உறுதிப்படுத்திய ஐ.அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மற்றிஸ், அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது தொடர்பாகப் பணியாற்றிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆனால், துருக்கியின் அறிவிப்புக்கு, ஐ.அமெரிக்காவின் பதில் என்னவாக இருந்தது என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

துருக்கிக்கு, உண்மையாகவே பாதுகாப்புப் பிரச்சினைகள் உள்ளன என மற்றிஸ் ஏற்றுக் கொண்டாலும், குர்திஷ்கள் உள்ளடங்கலாக எதிரணிப் போராளிகள், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை அழித்தொழிப்பதில், அதிக செயற்றிறன் மிக்கவையாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதை, அவர் சுட்டிக்காட்டினார். இதே வாதத்தை, ஐ.அமெரிக்கா தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற போதிலும், இதை ஏற்றுக் கொள்வதற்கு, துருக்கி தயாராக இல்லையென்பதாலேயே, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .