2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

தெளிவில்லாமல் நெதன்யாகுவின் எதிர்காலம்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 24 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரத்தைத் தக்க வைப்பதற்கான வாய்ப்புகள் தெளிவில்லாமல் இன்று காணப்பட்டிருந்தன.

இஸ்ரேலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்காவதாக நேற்று நடைபெற்ற தேர்தலின் பின்னரான கருத்துக்கணிப்புகள் இன்னொரு நெருக்கடிநிலையை எதிர்வுகூறுகின்ற நிலையிலேயே இவ்வாறு காணப்படுகின்றது.

இவ்வாரயிறுதி வரையில் இறுதி முடிவுகள் வெளியாகாது என்ற நிலையில், பிரதமர் நெதன்யாகுவின் வெற்றிக்குத் தேவையான ஆசனங்கள் கிட்டாது என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

பிரதமர் நெதன்யாகுவின் முன்னாள் பாதுகாப்பமைச்சரான, கடும் தேசியவாதி வைரியான நஃப்டலி பெனெட்டின் ஆதரவின் அடிப்படையில், பிரதமர் நெதன்யாகு தலைவராகவுள்ள வலதுசாரி லிக்குட் கட்சிக்கு, இஸ்ரேலின் மூன்று பிரதான தொலைக்காட்சிகளும் முன்னிலையை வழங்கியுள்ளன.

எனினும், பின்னர் திருத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பென்னெட்டின் ஆதரவுடனும் பெரும்பான்மை பெறுவது கடினமெனக் கூறப்படுகிறது. பிரதமர் நெதன்யாகுவின் எதிரணியினரும், ஆதரவாளர்களும் சரிசமமாகப் பிரிவர் எனக் கூறப்பட்டுள்ளது.

எதிரணியின் ஆதரவு அதிகரித்துள்ளதுடன், லிக்குட்டின் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .