2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தேர்தலில் ரஷ்யத் தலையீடு: கணக்குகளை முடக்கியது டுவிட்டர்

Editorial   / 2018 ஜூலை 16 , மு.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யா தலையிட்டது என்பது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுப் பத்திரத்தைத் தொடர்ந்து, ரஷ்யாவின் புலனாய்வாளர்கள் என அடையாளங்காணப்பட்ட 12 பேரோடு சம்பந்தப்பட்ட 2 டுவிட்டர் கணக்குகளை முடக்கியுள்ளதாக, டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

குற்றப் பத்திரத்தில் குறிப்பிட்டப்பட்ட இரண்டு டுவிட்டர் கணக்குகளான
@DCLeaks_, @Guccifer_2 ஆகியனவே, இவ்வாறு டுவிட்டரால் முடக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு கணக்குகளும், ஐ.அமெரிக்காவுக்கு எதிராகச் செயற்படுவதற்குச் சதி செய்தன எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், போலிச் செய்திகளைப் பரப்புவதில் ஈடுபட்டன எனக் கருதப்பட்ட ஏராளமான டுவிட்டர் கணக்குகளை, டுவிட்டர் ஏற்கெனவே முடக்கியிருந்தது. இந்நிலையில், தற்போது இக்கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .