2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள்

Editorial   / 2019 ஏப்ரல் 19 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிதம்பரம் தொகுதி பொன்பரப்பி, ஆம்பூர், ஆரணியில், வாக்குப்பதிவின் போது, இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, லேசான தடியடி இடம்பெற்றது என்றும் ஆனால், 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்தத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில், பா.ம.கவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பானையொன்றை உடைத்தமையால், பா.ம.க, வி.சி.க ஆகிய இரண்டு குழுக்களுக்கு இடையே, தகராறு ஏற்பட்டது. கைகலப்பாக மாறிய இந்தச் சம்பத்தால், அங்கிருந்த 20 வீடுகள் சேதமடைந்ததது. குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டதையடுத்து, அங்கு பொலிஸார் குவிக்கப்படட்னர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லார் ஊராட்சியிலும். தி.மு.க, பா.ம.க குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இடைத்தேர்தல் நடக்கும் ஆம்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க, அ.ம.மு.க கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. அ.ம.மு.க வேட்பாளர் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதோடு, ஒருவர், தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின்னர், பொலிஸாரின் தடியடியால், ஏற்பட்ட கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், தி.மு.க, அ.தி.மு.கவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதையடுத்து, அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X