2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தேர்தல் மோசடிக் குற்றச்சாட்டுகள்: தொடர்ந்தும் பதற்றத்தில் கென்யா

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கென்யாவில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளால், குறைந்தது 11 பேர், இதுவரை பலியாகியுள்ளனர் என்பதோடு, அங்கு தொடர்ச்சியான பதற்றம் நிலவி வருகிறது.

தேர்தல்களில், ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலே, அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. ஜனாதிபதி உஹுரூ கென்யாட்டா, மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சியின் வேட்பாளரான றைலா ஒடிங்கா, தான் நேர்மையாகத் தோற்கடிக்கப்படவில்லை எனவும், தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்து வருகிறது.

நாட்டில் பொதுவாக அமைதியே நிலவி வந்த போதிலும், தலைநகர் நைரோபியிலும் நாட்டின் சேரிப் புறங்களிலும், பாதுகாப்புப் படையினருக்கும் ஒடிங்காவின் ஆதரவாளர்களுக்கும் இடையில், மோதல் ஏற்பட்டது.

சிரேஷ்ட அதிகாரியொருவரின் கருத்துப்படி, நைரோபியின் சேரிகளிலிருந்து, 8 சடலங்கள், நகரத்தின் மலர்ச்சாலைகளுக்குக் கொண்டுவரப்பட்டன.

ஒடிங்காவினதும் அவரது கட்சியினதும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது, இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இவ்விடயத்தில் அமைதிகாக்கப் போவதில்லை என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், ஏற்கெனவே காணப்படும் அமைதியற்ற நிலைமை, மேலும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X