2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்தது

Editorial   / 2020 ஜனவரி 26 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியின் கிழக்கில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ள நிலையில், இரவு முழுதும் பணியாற்றிய மீட்பு அணிகளால் தகர்ந்த கட்டடங்களிலிருந்து 45 பேர் மீட்கப்பட்டுள்ளதாக துருக்கியின் இடர் முகவரகம் இன்று தெரிவித்துள்ளது.

பூச்சியத்தை அண்மித்த வெப்பநிலையைக் கொண்டிருந்த குளிர் வானிலைகளில் இயங்கிய மீட்புப் பணியாளர்கள் துளையிடும் இயந்திரங்கள், தோண்டும் இயந்திரங்கள், கைகளைப் பயன்படுத்தி, நேற்று முன்தினம் 6.8 றிச்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கிய எலஸிக் மாகாணத்தின் மூன்று இடங்களில் தப்பித்தோர்களை தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.

எலஸிக்கில் 31 பேர் கொல்லப்பட்டதுடன், அதன் அயல் மாகாணமான மலட்யாவில் நான்கு பேர் கொல்லப்பட்டிருந்ததுடன், 700க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டிருந்ததாக இடர் மற்றும் அவசரநிலை முகவரகம் இன்று தெரிவித்துள்ளது. 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு மாகாணங்களிலும் 645 கட்டடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 76 கட்டடங்கள் தகர்ந்துள்ளதாக இடர் மற்றும் அவசரநிலை முகவரகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .