2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்ற கீழவையின் அடுத்த சபாநாயகராக ஓம் பிர்லா

Editorial   / 2019 ஜூன் 18 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய நாடாளுமன்ற கீழவையின் சபாநாயகராக பாரதிய ஜனதாக் கட்சியின் ஓம் பிர்லாவை எதிரணி ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் மூலங்கள் தெரிவிக்கையில், அவர் அடுத்த சபாநாயகராகவுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா தொகுதியிலிருந்து இரண்டாவது தடவையாக இம்முறை தெரிவான ஓம் பிர்லா, பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு நெருங்கியவராகக் கருதப்படுகின்றார்.

இந்நிலையில், நாடாளுமன்ற கீழவையின் சபாநாயகராக ஓம் பிர்லாவுக்கு பாரதிய ஜனதா, ஷிவ் சேனா, ஷிரோமனி அகலி தளம், தேசிய மக்களின் கட்சி, மிஸோ தேசிய முன்னணி, லோக் ஜனஷக்தி, யுவஜன ஸ்ராமிகா றைத்து காங்கிரஸ், ஜனதா தளம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அப்னா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹட் ஜோஷி செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இது தவிர, அனைத்திந்திய காங்கிரஸ் செயற்குழுவின் செயலாளர் கொடிகுனில் சுரேஷ், மேலவையின் எதிர்க்கட்சித் தலைவராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் குலாப் நபி அஸாட்டுடன் தான் கதைத்ததாகக் கூறியுள்ள பிரல்ஹட் ஜோஷி, இதுவரையில் அவர் ஆதரவுக் கையொப்பமிடவில்லை எனவும், ஆனால் அவர்கள் எதிர்க்கமாட்டார்கள் என தான் நினைப்பதாகக் கூறியுள்ளார்.

முன்னதாக, பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பில் சபாநாயகராக ஓம் பிர்லா தெரிவுசெய்யப்பட்டதை உறுதிப்படுத்தும்முகமாக, சபாநாயகராகா ஓம் பிர்லாவைத் தெரிவு செய்ததற்கு தாங்கள் நன்றி தெரிவிப்பதாகவும், இதுவொரு மிகவும் பெருமையான, மகிழ்ச்சியான தருணமென ஓம் பிர்லாவின் மனைவி அமிதா பிர்ல்லா தெரிவித்திருந்தார்.

எவ்வாறெனினும், பாரதிய ஜனதாக் கட்சியின் செயல் தலைவராக நேற்று முன்தினமிரவு நியமிக்கப்பட்ட ஜெ.பி. நட்டாவின் வீட்டை விட்டு வெளியேறும்போது தான் எந்தத் தகவலையும் கொண்டிருக்கவில்லை என ஓம் பிர்லா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .