2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘நாயகன்’ வைத்தியருக்கு வீட்டில் சோகம்

Editorial   / 2018 ஜூலை 12 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தின் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களையும் அவர்களின் பயிற்றுநரையும் வெற்றிகரமாக மீட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு, “நாயகன்” எனப் பலராலும் அழைக்கப்பட்ட அவுஸ்திரேலிய வைத்தியர் ஒருவருக்கு, அவரது வீட்டில் கடுமையான சோகம் ஏற்பட்டுள்ளது.

உலகெங்கிலும் அறியப்பட்ட மருத்துவரான றிச்சர்ட் ஹரிஸ், இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமெனக் கோரப்பட்டது. இதையடுத்து, அவுஸ்திரேலியாவிலிருந்து அவர், தாய்லாந்துக்குச் சென்றார்.

அவர்களை மீட்பது தொடர்பான தெளிவான முடிவு எடுக்கப்பட முன்னரே, குகைக்குள் சென்று, மீட்புப் படையைச் சேர்ந்த மேலும் 3 பேரோடு இணைந்து, ஹரிஸும் தங்கியிருந்தார். இவர்களே, சிறுவர்களையும் பயிற்றுநர்களையும் கவனமாகப் பார்த்துக் கொண்டனர்.

அதேபோன்று, யார் யார் முதலில் வெளியேற்றப்பட வேண்டும் என்ற முடிவையும், ஹரிஸே எடுத்திருந்தார்.

12 சிறுவர்களும் பயிற்றுநரும் வௌியேற்றப்பட்ட பின்னர், மீட்புப் பிரிவினர் வெளியேறிய பின்னர், இறுதியாக வெளியேறிய நபராக, ஹரிஸே அமைந்தார்.

ஆனால் அவர் வெளியே வந்த பின்னர் தான், மீட்புப் பணி வெற்றிகரமாக முடிவடைந்து சில மணிநேரங்களில், ஹரிஸின் தந்தை, அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த செய்தி அவருக்குக் கிடைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .