2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாயகியான ஹீதர்

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்திலுள்ள சார்லொட்டெஸ்வைஸ் நகரத்தில் இடம்பெற்ற முரண்பாட்டின் விளைவாகக் கொல்லப்பட்ட ஹீதர் ஹேயர் என்ற பெண் பற்றிய தகவல்கள், வெளியாகிய வண்ணமுள்ளன.

32 வயதான ஹீதர், நவ நவாஸிகளுக்கும் வெள்ளையின ஆதிக்கத்தை வலியுறுத்தும் கு க்ளக்ஸ் க்ளான் குழு உறுப்பினர்களுக்கும் எதிரான தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இனவாதக் கொள்கைகளை வெளிப்படுத்தும் நபரின் சிலையை அகற்றுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் புரிய வந்த கடும்போக்கு வலதுசாரிகளுக்கு, தனது நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டுமென அவர் விரும்பியதாகவும், ஹீதரின் முகாமையாளர் தெரிவித்தார்.

ஹீதரின் பேஸ்புக்கில், இறுதியாகப் பகிரப்பட்ட விடயமாக, “நீங்கள் கோபப்படவில்லையெனில், நீங்கள் கவனம் செலுத்தவில்லையென அர்த்தம்” என்பது காணப்பட்டது.

சட்ட நிறுவனமொன்றில், வங்குரோத்துப் பிரிவில் கடமையாற்றிவந்த ஹீதர், அநியாயங்கள் இடம்பெறும் போது, அவற்றைக் கண்டு அடிக்கடி அழும் பழக்கத்தைக் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

வெள்ளையின ஆதிக்கவாதிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஹீதர், வெள்ளையின ஆதிக்கவாதி என்று கருதப்படும் ஒருவரால், காரால் மோதப்பட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X