2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நித்தியானந்தாவின் சர்ச்சைக்குரிய காணொளி: தடயவியல் பரிசோதனையில் நிரூபணமானது

Editorial   / 2017 நவம்பர் 23 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ்நாட்டின், சர்ச்சைக்குரிய காணொளியொன்றில், சுவாமி நித்தியானந்தா தோன்றியமை, தடயவியல் பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு, தனியார் தொலைக்காட்சியொன்றில் வெளியிடப்பட்ட இந்த காணொளியில், சுவாமி நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் ஆகியோர் இடம்பெற்றிருந்ததோடு, அந்தக் காணொளி, பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. 

எனினும், அந்தக் காணொளி, தனக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்பட்டது இல்லை என்றும் அது உண்மையான காணொளி அல்ல என்றும் நவீன தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும், சுவாமி நித்தியானந்தா சார்பில், நித்யானந்த தியான பீட நிர்வாகி, சென்னை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

இந்தப் புகாரின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள், சிலர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், 2010ஆம் ஆண்டு வெளியான சர்ச்சை காணொளியில், இருப்பது நித்யானந்தாதான் என்றும் அது உண்மையாக எடுக்கப்பட்ட காணொளிதான் என்றும் புதுடெல்லி தடயவியல் ஆய்வகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தக் காணொளிகளைத் தவிர, பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் வன்புணர்வுகள் தொடர்பிலும், சுவாமி நித்தியானந்தாவுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X