2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘நித்தியானந்தாவுக்குப் பிடியாணை வரும்’

Editorial   / 2018 ஜனவரி 30 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக, தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவிட நேரும் என, சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மதுரை ஆதீனத்தின் 293ஆவது மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதை எதிர்த்து, ஜெகதலபிரதாபன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 

நித்யானந்தா மடாதிபதியாக அறிவித்துக் கொண்டது சட்டவிரோதம் என்று தமிழக அரசாங்கம் பதில் அளித்தது. மடாதிபதி உயிருடன் இருக்கும்போது, மற்றொருவர், மடாதிபதியாக பொறுப்பு ஏற்க முடியாது என்று, அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது, நித்யானந்தா சார்பில், தான் இளைய மடாதிபதியாகத்தான் பொறுப்பு ஏற்றுக் கொண்டேன் என்றும் அதில் இருந்து விலக முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, பொறுப்பில் இருப்பது செல்லாது; அந்தப் பதவியை விட்டு விலகியதாக அறிவித்துவிட்டு, பதில் மனு தாக்கல் செய்யும்படி நித்யானந்தாவுக்கு நீதிபதி ஆர். மகாதேவன் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில், நீதிபதி சகாதேவன், மதுரை உயர்நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பாட்டார். இந்த வழக்கு, நீதிபதி சகாதேவன் முன்னிலையில் நேற்று (29) விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா சார்பில் இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்பது கவனத்தில் கொண்டுவரப்பட்டது.  

இதை கேட்ட நீதிபதி, “ஈராயிரம் பழமை வாய்ந்த மடத்தின் பெயரை கெடுக்கக் கூடாது. இந்த வழக்கில், பெப்ரவரி 2ஆம் திகதிக்குள் நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல், அவரைக் கைது செய்ய உத்தரவிட நேரிடும்” என்று எச்சரித்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .