2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’நீட்’ பரீட்சை; 5,000 தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் பரீட்சை

Editorial   / 2018 மே 06 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலும், தமிழகத்திலும் சர்ச்சையை ஏற்படுத்திய வைத்தித்துறை மாணவர் சேர்க்கைக்கானதேசிய தகுதி மற்றும் நுழைவுப் பரீட்சை, (NEET - நீட்)  இந்தியா முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று நடைபெறுகின்றது.

இந்தப் பரீட்சையில், 13 இலட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவ, மாணவிகள் தோற்றியுள்ளதோடு, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இலட்சத்து  7,288 மாணவர்கள், 170 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள வைத்திய பட்டப்படிப்புகள், ஆயுர்வேம், யோகா, இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்வபவர்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வை இந்திய மத்திய இடைநிலை கல்வி மையம்  நடத்துகின்றது.

இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டமைக்கு அமைய, நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெறுகின்றது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, நாமக்கல், சேலம், வேலூர், திருநெல்வேலி ஆகிய 10 நகரங்களில் உள்ள 170 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறுகின்றது.

இந்தியா முழுவதும் 136 நகரங்களில் மொத்தம் 2,255 நிலையங்களில், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் பரீட்சை நடைபெறுகின்றது.

நீட் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பலத்த சோதனைக்கு பின்னரே மாணவ, மாணவிகள் பரீட்சை நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தமிழகத்தைச் சேர்ந்த 5,600 மாணவ , மாணவிகள் கேரளா மற்றும் ராஜஸ்தானில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .