2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’நீரின்றி அமையாது உலகு’ ; தமிழில் பேசிய மோடி

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.

மோடி உரையாற்றுகையில், “முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்றால் வறுமை ஒழிக்கப்பட வேண்டும். வறுமையில் உள்ளவர்கள் சவால்களை சமாளிக்கும் வழிகளை அறிந்தவர்கள்.

இன்றளவும் தண்ணீர் வசதி இல்லாத வீடுகள் உள்ளன, நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலைதான் உள்ளது. நாட்டு மக்கள் அனைவரது வீடுகளிலிலும் தண்ணீர் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் ஜல் ஜீவன் மிஷன். 

பல ஆண்டுகளுக்கு முன் ஜெயின் முனிவர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றார், அவரின் வாக்கு இப்போது பலித்துக் கொண்டு இருக்கிறது” என்றார்.

அத்துடன், தண்ணீரின் முக்கியத்துவத்தை குறித்து விளக்கி பேசியபோது, நீரின்றி அமையாது உலகு என தமிழில் பேசினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .