2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நீர்மூழ்கியிலிருந்து ஏவக்கூடியதான ஏவுகணையை ஏவிய வடகொரியா

Editorial   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுடன் தனது அணுத் திட்டம் தொடர்பாக தடைப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளை மீளத் தொடங்குவதாக நேற்று  அறிவித்திருந்த வடகொரியா, மறுநாளான இன்று நீர்மூழ்கிக் கப்பலொன்றிலிருந்து தனது கிழக்குக் கரையிலிருந்து குறைந்தது ஒரு ஏவுகணையை ஏவியதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், குறித்த ஏவுகணை ஏவல் தொடர்பாக பலத்த கவலையை வெளிப்படுத்தியுள்ள தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு சபை, குறித்த ஏவுகணையானது நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையாக இருக்கலாம் எனத் தெரிவித்ததாக தென்கொரிய ஜனாதிபதி மாளிகையான நீல மாளிகையால் விடுக்கப்பட்ட அறிக்கை கூறுகின்றது.

இதேவேளை, 450 கிலோ மீற்றர் தூரம் பயணித்ததுடன், 910 கிலோ மீற்றர் வீச்சத்தை அடைந்ததுமான ஏவுகணையொன்றை தாங்கள் கண்டுபிடித்ததாகத் தெரிவித்த தென்கொரிய இராணுவம், வடகொரியாவால் கடலுக்கடியிலான சோதனைத் தளமொன்றிலிருந்து 2016ஆம் ஆண்டு ஏவப்பட்ட புக்குசொங் வகையிலான ஏவுகணையொன்று என தாம் நம்புவதாகக் கூறியுள்ளது.

வடகொரியாவின் கிழக்குக் கரையில் அதன் இராணுவத் தளங்களுள்ள வொன்சனிலிருந்து கடலை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .